திருவாரூர், நவ. 25 –
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் அதிரடி உத்தரவின் பேரில் பள்ளிக்கூடம் அருகில் போதை வஸ்துகள் விற்பனை செய்து வந்த கடைக்கு சீல், உரிமையாளரை கைது செய்து குடவாசல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவத்து நாளன்று குடவாசல் ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் தடை செய்ய்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், குட்கா, கூலிப் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு காவல்துறையினர் சீல் வைத்து கடைஉரிமையாளரை கைது செய்து அவர் விற்பனைக்கு எடுத்து வந்த தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், பணம் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து தொடர் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற் கொண்டு வருகின்றனர்.
பள்ளி அருகில் செயல்பட்ட மளிகை கடையில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த போதை பொருள் பாக்கெட்டுக்களை காவல் துறையின் கண்டறிந்தனர். பின்னர் அதனை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
அதுப் போலவே வலங்கைமான் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.
குடமுருட்டி ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ராஜேஷ் என்ற கும்பகோணம் சேர்ந்த இளைஞர்
தனது இருசக்கர வாகனத்தில் (Yamaha FZ – TN 68 W 5709)
1)V1 Pan Masala – 180 Packets. 2)HANS – 456 Packets. 3)Cool Lip – 300 Packets. 4)Vimal Pan Masala – 225 Packets. மற்றும் பணம் Rs. 1,86,190/- ஆகியவைகளை எடுத்து வந்த போது, பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது
பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், எச்சரித்துள்ளார்.





















