பொன்னேரி, ஆக. 30 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.
மேலும் அப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்திட வேண்டுமென்பதை வலியுறுத்தி அக்கோரிக்கையை முன்னெடுத்து அவர்கள் அக்காத்திருப்பு போராட்த்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் பெண் அலுவலர்களை ஒருமையில் தரக்குறைவாக வசைப்பாடி அவமதித்த, அரசு நிர்வாகத்தில் அத்துமீறி அடாவடித்தனமாக தலையிட்டு வரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினார்கள்.
பொன்னேரி வட்டக் கிளை செயலாளர் கீதா தலைமையில் நடைபெற்ற அக்காத்திருப்பு போராட்டத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


















