பொன்னேரி, ஆக. 28 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட  13 வது வார்டில்  உள்ள என் ஜி ஓ நகர் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளினால் அப்பகுதி சாலைகள் பெருத்த சேதம் அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் புதிய சாலை அமைத்துத் தர வேண்டி அப்பகுதிவாழ் மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்த தின் பேரில் இன்று அப்பகுதியில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவ்வாய்வின் போது சட்டமன்ற உறுப்பினருடன் பொன்னேரி நகராட்சித் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் கோபிநாத், வார்டு உறுப்பினர்கள் நல்லசிவம், உமாபதி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் என பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here