சென்னை, ஆக. 28 –

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட  யு.பி.எஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் அமைந்துள்ள தொழில் நுட்ப மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னை போரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னணியில் உள்ள யு.பி.எஸ். ( யுனைடெட் பார்சல் சர்வீஸ் ) நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னை போரூரில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ள தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.

மேலும் முதலமைச்சரின் கனவுத்திட்டமான நான்முதல்வன் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அம்மையத்தில் உயர் தொழில் நுட்ப வேலை வாய்ப்பிற்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதங்களையும் வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கும் போது அகில இந்திய அளவில் தமிழ்நாடு பல பொருளாதார குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது எனவும், மேலும் இந்நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற் கொண்டு வருவதாக தெரிவிக்கிறது.

மேலும், வணிக நடைமுறைச்சட்டம் –விதிகளில் பெமளவிலான சீர்திருத்தங்களை மேற் கொண்டு, அனுமதிகள் பெறுவதை இலகுவாக்கியதின் விளைவாக, ஒன்றிய அரசு வெளியிட்டு வரும் தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்களின் தர வரிசையில் 14 வது இடத்திலிருந்த தமிழ்நாடு, வெகுவாக முன்னேறி தற்போது 3 வது இடத்தைப் பெற்றுவுள்ளது. எனவும் மேலும் உலகத்தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட துறைவாரியான தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் முதலீடுகள் மேற் கொள்ளப்படுவதை ஊக்கிவிப்பதற்கு, துறை வாரியாக கொள்கைகளையும் தமிழ்நாடு வெளியிட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என முதலமைச்சர் நிர்ணயித்துள்ள லக்கினை எய்துதற்காக, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியதின் விளைவாக இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை, 4,15,282 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் ரூ.2,97,196 கோடி மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளின் அடுத்தக் கட்டமாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்தி, பெருமளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குஇப்பு மற்றும் வர்த்தகத்துறை மேற் கொண்டு வருவதாக அரசு தெரிவிக்கிறது.

இந்நிலையில்தான் யுனைடெட் பார்சல் சர்வீஸ் எனும் நிறுவனம் அமெரிக்க நாட்டை சேர்ந்ததாகும். மேலும் இந்நிறுவனம் சரக்குப்போக்குவரத்து – தளவாடங்களை 220 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் 5 இலட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் உலகளாவிய முன்னணி நிறுவனமாக இந்நிறுவனம் திகந்து வருகிறது. குறிப்பாக உலகளவில் அந்நிறுவனம் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறதெ தகவல் தெரிவிக்கிறது.

தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செலவிதில் தொடர்ந்து முதலீடு செய்து இந்தியாவில் முதலாவதாக, சென்னை போரூரில் உள்ள ஆர்.எம். இசட் பாராமௌண்ட் வளாகத்தில் அந்நிறுவனம் அமைத்துள்ள தொழிநுட்ப மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்  அத்துடன் தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அம் மையத்தில் பயிற்சி பெறுவதற்கான கடிதங்களையும் வழங்கினார்.

மேலும்அந்நிறுவனம் பொறியியல், மென்பொருள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளைச் சேர்ந்த 400 உயர் தொழில் நுட்ப வல்லுநர்களை, குறிப்பாக கிராம்பஃபுற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி, பணியமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் அந்நிறுவனம் சார்பில் இத்தொழில் நுடப் மையத்தை அமைப்பதற்கு இந்தியாவில் பல நகரங்கள் பரிசீலிக்கப்பட்டதில், அமெரிக்காவில் உள்ள தங்களது தலைமையகம் போன்றே நேர்த்தியான ஒரு இடம் தமிழ்நாடு என உணர்ந்ததால், செனையை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான மையங்களும், உலகளாவிய திறன் மையங்களும் அதிக அளவில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசால்மட்டும் 30 க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ளன. அதனால் தமிழ்நாட்டின் போட்டித்தன்மையை வெகுவாக அதிகரிக்க அது வழி வகுக்கும் என இளைஞர்கள் உள்ளிட்ட அனைவராலும் உறுதியாக நம்பப்படுகிறது.

மேலும் இச்சிறப்புமிகு விழாவில் தொழில், முதலீட்டு ஊக்குஇப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் ச.கிருஷ்ணன் இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு இ.ஆ.ப., யு.பி.எஸ். நிறுவனத்தின் உலகளாவிய தலைமை டிஜிட்டல் மற்றும் தொழில் நுட்ப அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைமை மனிதவள அலுவலர் டேரல் ஃபோர்டு, இந்தியாவிற்கான துணைத்தலைவர் சுப்ரமணி ராமகிருஷ்ணன், சென்னை தொழில் நுட்ப கழகத்தின் தலைவர் பி. ஸ்ரீராம், கேரியர் டெவலப்மண்ட் மையத்தின் முதல்வர் டாக்டர் பாலமுரளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here