சென்னை, ஆக. 22 –
தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக பதவியேற்று, சிறப்பாக பணியாற்றி வரும் சி.பி.சங்கர் ஜிவாலின் ( இ.கா.ப ) அலுவலகத்திற்கு இன்று மாலை தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியனின் நிறுவனத் தலைவர் டாக்டர். மு. சிவ தமிழவன் தலைமையிலான யூனியனின் தலைமை நிர்வாகிகள் குழு காவல்துறை இயக்குநரை நேரில் சந்தித்து அவருக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து அவரது பணிச் சிறக்க வாழ்த்துக்களையும் அப்போது அக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் காவல்துறை இயக்குநரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்கள். கோரிக்கை மனுவினை கனிவுடன் பெற்றுக்கொண்ட காவல்துறை இயக்குநர், அம் மனு மீதான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, யூனியனின் நிறுவனத்தலைவர் டாக்டர் மு.சிவ தமிழவனுடன் மாநில பொதுச்செயலாளர் சி.பி. இராஜன், பொருளாளர் ஏ.சேகர், தலைமை நிர்வாக இயக்குநர் லயன் எம். பெருமாள், துணைச்செயலாளர் வீ.ஆர்.ராஜி, மாநில செய்தி தொடர்பாளர் அம்சத் இப்ராஹீம் உள்ளிட்ட யூனியன் தலைமை அலுவலக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நிறைவான இச்சந்திப்பின் நிறைவில் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சி.பி. சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களுக்கு யூனியன் சார்பில் நன்றியினை தெரிவித்தனர்.




















