பொன்னேரி, ஆக. 21 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அரசு பொது நல மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாற்காக, மருத்துவமனை சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 28 க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சார்ந்த 1000 க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக தினந்தோறும் அம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இந்நிலையில் அம்மருத்துவமனை அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி அம்மருத்துவமனையில் உயிரிழக்கும் உள் நோயாளிகள் மற்றும் பல்வேறு காரணங்களினால் உயிரிழக்க நேரிடும் நபர்களின் எண்ணிக்கை தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்டதாக உள்ளதாகவும், மேலும் அவர்களின் இறந்த உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்க அம்மருத்துவமனையில் தற்போது வரை சுமார் இரண்டு குளிர்சாதனப்பெட்டி மட்டுமே உள்ளதாக அப்பகுதி வாழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதனால் அம் மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க முடியாமல் அம்மருத்துவமனை நிர்வாகம் பெருத்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், தொடர்ந்து வரக்கூடிய இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க முடியாமல் அம்மருத்துவமனையால் சென்னைக்கு சென்னைக்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுவதாகவும், அதனால் கால விரயம் மற்றும் வீண் அலைச்சல் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து வித சிரமங்களுக்கும் அப்பகுதி மக்கள் உள்ளாக்கப்பட்டு அவதிப்படுவதாக மேலும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக அம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் பெரும் பகுதி கூலித்தொழிலாளிகளே என்பதால் அவர்களால் சென்னைப்போன்ற பகுதிக்கு சென்று அங்கிருந்து இறந்தவர்களின் உடல்களை எடுத்துவர பெரிய தொகையினை வழங்கிடும் நிலை ஏற்படுதால் பொருளாதார சிக்கலில் அவர்கள் அகப்பட்டுக்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் துறைச்சார்ந்த நிர்வாகமும், கவனத்தில் கொண்டு பொன்னேரி அரசு பொது நல மருத்துவமனைக்கு இறந்தவர்களின் உடலினை பாதுகாத்திட கூடுதலாக குளிர்சாதன பெட்டிகள் வழங்கிட நடவடிக்கை எடுத்திடும் படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொன்னேரி செயலாளர் நா.ஜீவா தெரிவித்தார். மேலும் உடனடி நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here