மீஞ்சூர், ஆக. 12 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு உப்பங்கழி பகுதியில் அமைந்துள்ள சாண்டி கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு ஸ்ரீசக்கர பூஜை அத்திருக்கோயிலில் நடைபெற்றது,

இந்நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். வாதவூர் அடிகளார், அன்னபூரணி அம்மாள், காயத்ரி தேவி, தாமரை சோமு, கோகுலகிருஷ்ணன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,

இதில் பாரதம் செழிக்க வேண்டியும், அடுத்த பிரதமராகவும் மோடி வரவேண்டியும் சிறப்பு யாக பூஜைகளும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் திருவள்ளூர் மாவட்டத்தில் புராதனமாய் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த எருமை வெட்டி பாளையத்தில் அமைந்துள்ள நூற்றெஈஸ்வரர் திருக்கோவிலும், பழவேற்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிநாராயண சுவாமி திருக்கோவிலும் கூடிய விரைவில் புறனமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். எனவும்,

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கேரள மாநிலத்திற்கு மாட்டு செல்வங்களை சட்டவிரோதமாக கடத்துவதாகவும், தமிழகத்தில் கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்களை காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து ஒழிக்க வேண்டும் எனவும், விரைவில் தமிழகத்தில் ஆன்மீக அரசாட்சி வரவேண்டும் என பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆன்மீக பக்தர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here