மீஞ்சூர், ஆக. 12 –
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகளுக்கான அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றிய திமுகச் செயலாளர் காணியம் ஜெகதீசன் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படும் தொண்டர்களுக்கு கட்சியின் சார்பில் வழங்கப்படும் பொறுப்புகள் குறித்தும், அதை நியமிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் அவ்வாலோசனைக் கூட்டத்தில் யார் யார் எந்தெந்த பொறுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கலந்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்ப படிவுகள் வழங்கப்பட்டது.
மேலும் மாவட்ட பிரதிநிதி குணாளன் ஒன்றிய துணைச் செயலாளர்கள் பார்த்தசாரதி, ஸ்டாலின், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுமதி, ஏலியம்பேடு கிளை செயலாளர் ஹரி கிருஷ்ணன், ஏறுசிவன், கிளை செயலாளர் ரவி, காட்டாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மங்கை உமாபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரசாத் முன்னாள் கவுன்சிலர் ஏலியம்பேடு நிர்மலா மற்றும் திமுக நிர்வாகிகள் அன்னதாசன், மலையப்பன், காட்டூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகம், நேதாஜி, கிரிதரன், மணி உள்ளிட்ட 50 – க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் இவ் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.




















