மீஞ்சூர், ஆக. 06 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆடி கிருத்திகையன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் திருக்கோயிலுக்கு இக்கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தியும் பால்காவடி சுமந்தபடியும் கடந்த முத்தி ஐந்து வருடங்களாக ஆண்டுதோறும் இத்திருக்கோயில் இருந்து சென்று வருகின்றனர்.
அதுப்போன்றை இவ்வாண்டும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு திருத்தணி திருக்கோயிலுக்கு முருகனை வழிப்பட சென்றனர்.
அவர்களுக்கு இத்திருக்கோயிலின் அறங்காவலர் எம்.வேலாயுதம் சாமியார் தலைமையிலும், இருதயசாமி, ராஜா, ஆறுமுகம், கார்த்திக், வடிவேல், பொன்னுரங்கம், உள்ளிட்டவர்களின் முன்னிலையிலும் விரமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் உள்ளிட்ட முருகப்பக்தர்களுக்கு உடலில் அலகு குத்தி பம்பை உடுக்கை மேளங்கள் முழங்க பல்வேறு வாகனங்களில் தொங்கியபடியும் , இளநீர், வாகனங்களை இழுத்துக் கொண்டு ஊர்வலமாக வளம் வந்து அப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் முடித்தனர்,
அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் திருத்தணி முருகனை வழிப்பட்டு, நேர்த்திக் கடன் முடிப்பதாற்காக பேருந்தில் பயணம் மேற் கொண்டனர். அவர்கள் அனைவரையும் திரளான அக்கிராமத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.


















