பொன்னேரி, ஆக. 03 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நான்காம் பெட்டாலியன் பிரிவு கமாண்டர் மணிகண்டன் தலைமையில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இப்பள்ளியில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கல்விப்பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்று பேரிடர் காலங்களில் சக மனிதருக்கு எவ்வாறு முதலுதவி செய்வதென பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் அவர்களுக்கு அப்பயிற்சிக் குறித்து ஒத்திகைகளை நடத்தி காட்டினர். மேலும் மாணவர்களை ஒத்திகையில் ஈடுபடச் செய்து பயிற்சியில் ஈடுபடச் செய்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here