கும்பகோணம், ஆக. 02 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா காவிரி டெல்டா பகுதிகளில், நாளை நடைப்பெறயிருக்கும் ஆடிப்பெருக்கு பெருவிழாவினை முன்னிட்டு, அப்பகுதியில் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை வெகு ஜோராக நடைப்பெற்று வருகிறது.
மேலும் இத்தொழிலில் மூன்று தலைமுறைகளாக ஈடுப்பட்டு வரும் தொழிலாளி ஒருவர் அத்திருவிழாப் பற்றியும் அவர் செய்து வரும் தொழில் பற்றியும் பெருமிதத்துடன் பல்வேறு சுவராஸ்யமான தகவல்களை தெரிவித்தார்.
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா காவிரி டெல்டா பகுதிகளில் அப்பகுதி மக்கள் ஆண்டு தோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடும் விழாக்களில் ஆடி 18 அன்று நடைடப்பெறும் ஆடிப்பெருக்கு பெருவிழா ஆகும். மேலும் இந்நாளுக்கென பல்வேறு பெருமைகள் உண்டு அதில் வேளாண்மை சார்ந்த பகுதியாக இது இருப்பதால் ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். மேலும் ஆண்டு முழுவதும் உழவுக்கும் உழவுப்பெரு மக்களுக்கும் நன்மை வழங்கி வரும் காவிரித்தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்கள் காவிரி அன்னையை வணங்கி அத்தாய்க்கு பல்வேறு பலகாரங்களை வைத்து படைத்து வழிப்பாட்டில் ஈடுப்படுவார்கள் என அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் இந்நாளில் இவ்விழாவினை சிறப்படையச்செய்யும் வகையில் அப்பகுதி சிறுவர்கள் இழுத்துச் செல்லும் மரத்தினாலான சப்பரத்தேர்கள் காண்பதற்கு மிகவும் அழகாகயிருக்கும் என தெரிவிக்கின்றார்.அதன் காரணமாக தற்போது சப்பரத்தேர் விற்பனை களை கட்டி வருவதாகவும், மேலும் அத்தொழிலில் கடந்த மூன்று தலைமுறைகளாக தங்கள் குடும்பத்தச்சார்ந்தவர்கள் ஈடுப்பட்டுவருவதாக பெருமையாக தெரிவித்தார்.
இம்மரத்திலான சப்பரத்தேர் காவிரித்தாயை வீட்டிற்கு அழைத்தவர பயன்படுத்தும் தேராக கருதி சிறுவர்கள் சப்பரத்ததேர்களை இழுத்து செல்வார்கள். மரத்தினாலான சப்பரத்தேர்கள் செய்யும் பணியில் திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சியை சேர்ந்த பாஸ்கரன் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக கொரோனா போன்ற பல காரணங்களால் கலையிழந்துப்போன இப்பெருவிழா இவ்வாண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வெகு விமர்சையாக ஆடிப்பெருக்கு பெருவிழா கொண்டாடப்படவுள்ளதெனவும், அதனைக் கருத்தில் கொண்டு சப்பர தேர்களை செய்யும் பணியில் முழு வீச்சில் பாஸ்கரன், ஈடுபட்டுள்ளார். போன ஆண்டு ரூபாய் 100 முதல் விற்பனை செய்யப்பட்ட மரத்தினால் ஆன சப்பரத் தேர்தல் மூலப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த ஆண்டு 200 முதல் 300 வரை சப்பரதேர்களை விற்பனை செய்து வருகிறார்.