கும்பகோணம், ஜூலை. 17-

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் உள்ள பாரதிநகரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருபவர், திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, ஓகை கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரன்.

இந்நிலையில், தற்போது அதே ஊரிலுள்ள லட்சுமி நகரில், புதிதாக வீடு கட்டி வருகிறார். மேலும் அதன் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழ்களை சுற்றம் மற்றும் நட்புச் சார்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து அழைப்பு விடுப்பதற்கு முன்னதாக, தனது குடும்பத்தினருடன், திருச்சி மணச்சநல்லூரில் உள்ள அவர்களது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு அனைவருக்கும் அழைப்பிதழை கொடுத்து விட்டு வீடு திரும்பிவுள்ளனர்.

இந்நிலையில், அவரது வீட்டின் முன் பக்க கேட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, முத்துக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் ரூ. 10 லட்ச மதிப்புடைய 21 பவுன் தங்க நகைகள், மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம், திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, உடனடியாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் அவரளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு சம்பவ இடத்திற்கு வந்து இத்திருட்டுக் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here