திருவாரூர், ஜூன். 21 –

திருவாரூர் நகர பாஜக மற்றும் ஒளிரவன்  பவுண்டேஷன் ஆரூரான் யோகா பயிற்சி மையம் இணைந்து நடத்திய யோகா தின பயிற்சி சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்றது.

இச்சிறப்பு யோகா பயிற்சி முகாமிற்கு, பாஜக நகர தலைவர் எஸ். கணேசன் தலைமை தாங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பாஜக நிர்வாகிகள் என சுமார் 75 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இச்சிறப்பு யோகா பயிற்சி மையத்தில், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், தலைவர் A. பாலமுருகன் மற்றும் செயலாளர் ஆர் குணசேகரன் ஆகிய இருவரும் பயிற்சி அளித்தார்கள்.

தொடர்ந்து, இந்நிறுவனத்தின் தலைவரான பாலமுருகன் யோகாவின் பயன்களை பற்றியும், நலன்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து, ஒவ்வொரு பயிற்சியையும் செய்து காட்டினார். அதனைத்தொடர்ந்து  அனைவரும் பின் தொடர்ந்து செய்தார்கள்.

மேலும் இச்சிறப்பு யோகா பயிற்ச்சி மையத்தில் உரை நிகழ்த்திய திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பாரதப் பிரதமரின் கனவு திட்டங்களில் யோகாவும் ஒன்று எனவும், மேலும் அதனை ஏற்றுக்கொண்டு, உலகமே இந்நாளை யோகாவை சர்வதேச யோகா தின நாள் என அறிவித்துள்ளது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் மனித வாழ்வில் யோகா என்பது ஒரு அங்கம் வகிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது எனவும், இதனை எந்த அளவுக்கு மக்கள் பயன்படுத்துகிறார்களோ, பயிற்சி பெறுகிறார்களோ அந்த அளவுக்கு பயனடைவார்கள் எனவும் அப்போது  மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் குறிப்பிட்டார்.

மேலும் யோகா பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மட்டுமின்றி தாங்களும் யோகா பயிற்சி மேற் கொண்டு, நலம் பெற வேண்டும் என அப்போது அனைவருக்கும் அறிவுறுத்தினார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் நிறைவாக பங்கேற்ற அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தவுடன் துளசி செடி மற்றும் பயிற்சியில் கலந்து கொண்ட பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் மாவட்ட பாஜகவின் சார்பாக சான்றிதழ்கள், மற்றும் பேனா நோட் வழங்கப்பட்டது. இப் பயிற்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன் மாவட்ட செயலாளர் கே ரவி ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கழுகு சங்கர் கல்வியாளர் பிரிவு எட்டியலூர் சிவா, நகர பொருளாளர் ரமேஷ் நகர பொதுச்செயலாளர் நடராஜன் மற்றும் செல்வ சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் திருவாரூர் நகர பாஜகவின் சார்பாக மடப்புரம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் யோகா பயிற்சி நடத்தப்பட்டது இத்துடன் திருவாரூர் ஒன்றியத்தில் ராஜா ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் புதூரில் உள்ள பள்ளியில் யோகா தினம் சிறப்பு பயிற்சியை நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளியின் தாளாளர் மது சுந்தரேஸ்வரர் கலந்து கொண்டு, மாணவிகள் மற்றும் பெரியோர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here