கும்பகோணம்,மே. 29 –
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் அடுத்துள்ள மாத்தூர் அமைந்துள்ளது, புனித ஜெயராக்கினி அன்னை திருத்தலமாகும்.
இத்திருத்தலத்தின் தேர்பவனி விழா ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் அவ்வாலயத்தின் 155 ஆம் ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகள் கடந்த 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு, மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி தலைமையில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து வெகுச் சாறப்பாக நடைபெற்து.
முன்னதாக காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினார்கள்.
அனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேரில் புனித அந்தோனியார், ஜெயராக்கினி, சம்மனசு, சூசையப்பர், ஆடம்பர தேரில் எழுந்தருள 155 ஆம் ஆண்டு தேர்பவனி வாண வேடிக்கையுடன் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
இந்நிகழ்வில் ஏராளமானோர் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமைகள், இருதயராஜ், சேகர், மரியதாஸ், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.