கும்மிடிப்பூண்டி, மே. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது, இம்முகாமிற்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம் ஆர்.ஜானகிராமன் தலைமை வகித்தார், அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஷேக் அகமது, மீஞ்சூர் நகர திமுக செயலாளர் தமிழ் உதயன், மீஞ்சூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் அலெக்சாண்டர், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பயணிகள் வசதிகள் குழு ரயில்வே அமைச்சகம் எம் கே ரவிச்சந்திரன் கலந்துகொண்டு அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளான மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரியும், விரைவில் சுரங்கபாதை அமைத்து தரக்கோரியும் ,ரயிலில் பிச்சை எடுப்பவர்களின் அட்டூழியம் தடுத்து நிறுத்த வேண்டும், கும்மிடிப்பூண்டி மார்க்கத்திற்கு கூடுதலாக ரயில் இயக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்,
இதில் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பாலன், கதிர்வேல், வியாபாரிகள் சங்க மீஞ்சூர் வட்டார தலைவர் ராஜா, வழக்கறிஞர்கள் விஷ்ணுகுமார், தங்கமணி,மணிகண்டன், அதிமுக நகர செயலாளர் பட்டாபிராமன், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர், அதனைக் கேட்டு அறிந்தவர் இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
















