மீஞ்சூர், மே. 25 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு அரியன்வாயல் எவரடி நகர் பகுதியில், வளமீட்பு பூங்கா அமைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டு அவ்விடத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த இடத்தில் தற்போது பூங்கா அமைக்காமல் அதனை குப்பை கழிவுகளை கொட்டும் கிடங்காக மாற்ற முயல்வதாகக் கூறி அப்பகுதியில் உள்ள ஜெகன் நகர் பொதுமக்கள் பூங்காவின் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

அத்தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை மற்றும் பேரூராட்சியின் செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணைத் தலைவர் அலெக்ஸாண்டர், முன்னாள் நகர திமுக செயலாளர் மோகன்ராஜ், வியாபாரிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஷேக்அகமது உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் அப்பகுதி மக்களிடம் இப்பகுதிக்கு குப்பை கிடங்கு வராது என உத்தரவாதம் கொடுத்ததின் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here