போரூர், மே. 18 –
சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லியில் உள்ள எஸ். கே. ஆர் பொறியியல் கல்லூரியில் கடந்த பத்தாம் தேதி முதல் உண்டு உறைவிட கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் சிறகுகள் இருநூறு என்ற திட்டத்தின் மூலம் பழங்குடியின மாணவ மாணவிகள் 200 பேருக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் ஆல்பி வர்கீஸ் அறிவுறுத்தலின் படி அம்மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாமில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, அம்மாணவர்களில் 49 பேர்களுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை வேனில் அழைத்து சென்று, தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 1 இலட்சம் மதிப்பிலான ஆடைகளை அனைவருக்கும் போரூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் துணிகடையில், நேற்று ஆடைகள் வாங்கித் தரப்பட்டது. இந்நிகழ்வில் துணை ஆட்சியர் சுபலட்சுமி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி, மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.