செங்கல்பட்டு, ஏப். 26 –

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர்  அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) – ல் இருந்து பேசுவதாக சரவணனின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல், குலுக்கல் முறையில் உங்கள் செல்போன் எண் தேர்வாகி உள்ளது எனவும், மேலும் அச்செல் நம்பருக்கு பரிசு பொருளாக மகேந்திரா XUV 700 கார் பரிசாக விழுந்துள்ளதாகவும் அப்போது அம் மர்ம நபர்கள் சரவணனிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல இலட்சம் மதிப்புள்ள அக்காரினை நீங்கள் பெற வேண்டுமெனில் தவணை முறையில் ரூ. 4.50 இலட்சம் பணத்தினை செலுத்த வேண்டும் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அம் மர்ம நபர்கள் கூறிய ஆசை வார்த்தையில் மயங்கிய சரவணன், தவணை முறையில் கூகுள் பே மூலம் தினேஷ், பூஜா ராணி, ரஞ்சினி தேவி ஆகிய நபர்களின் செல் நம்பருக்கு சுமார் 4,50,000 ரூபாய் வரை பணத்தை அனுப்பி உள்ளார்.

மேலும், தொடர்ந்து பணத்தை அனுப்பி வந்த அச்செல்போன் நம்பர்களுக்கு, ஒரு வாரத்திற்கு பின்பு சரவணன் தொடர்பு கொண்ட போது, அனைத்து செல் போன் எண்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவித்துவிட்டு மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந் நிலையில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here