கும்மிடிப்பூண்டி, ஏப். 23 –

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பெருவாயல் பகுதியில் செயல்பட்டு வரும், டி.ஜெ.எஸ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் நடப்பு ஆண்டுற்கான ஆண்டு விழா மற்றும் முன்னதாக அக்கல்லூரியில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அக்கல்லூரி மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும், நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் செயலர் டி.ஜெ. ஆறுமுகம் தலைமை வகித்தார். மேலும் கல்லூரி இயக்குனர் தினேஷ் அவ்விழாவிற்கு வருகைத் தந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் இவ்விரு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் டி.ஜெ.எஸ். கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராசன் இவ்விழாவில் பங்கேற்றார்.

மேலும் அதனைத் தொடர்ந்து அவர், அக்கல்லூரி விழாவில் நடைப்பெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு, பதக்கங்கங்கள், பரிசுகள், மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

மேலும், இவ்விழாவில் அக்கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு அமுதவாணன் கலந்து கொண்டு மாணவர்களிடத்தில் உரைநிகழ்த்தினார்.

மேலும் தொடர்ந்து அவர் பல்வேறு நடிகர்கள் மற்றும் பிரபலங்களைப் போன்று பலகுரல்களில் பேசியும், நடனமாடியும் அக்கல்லூரி மாணவர்களிடையே பலத்த கைதட்டலையும் பாராட்டுக்களையும் பெற்றார்.

மேலும் இவ்விழாவில் பள்ளி இயக்குனர்கள் பழனி, விஜயகுமார், கபிலன், தமிழரசன், கல்லூரி முதல்வர் பிச்சைமணி, கல்வி குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், ராஜேஷ், ஜெயக்குமார், நிர்வாகஅலுவலர் ஏழுமலை  உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக அக்கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என திரளானவர்கள் பங்கேற்று அவ்விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here