கும்பகோணம், ஏப். 18 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகனான திமுக கட்சியைச் சார்ந்த 58 வயதுடைய ராஜேந்திரன், மேலும் இவர் பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார்.
மேலும் இவருக்கும் இவரது அண்ணன் மகனான காமராஜ் சாலையில் வசித்து வருபவருமான குமாருக்கும் நிலத்தகராறு இருந்து வருவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இன்றுக் காலை ராஜேந்திரன் பட்டீஸ்வரம் கடைவீதியில் உள்ள டீ கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருக்கும் போது, அப்போது அங்கு வந்த குமாருக்கும், ராஜேந்திரனுக்கும் நிலம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருக் கட்டத்தில் வாக்குவாதம் எல்லை மீறவே குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிதாக தெரிய வருகிறது.
இதில் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரனை, ஊராட்சி மன்ற தலைவர் ரகு மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலயறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டீஸ்வரம் காவல்துறை ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.