மதுரவாயல், ஏப். 14 –

சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவரது புகழைப்போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று மதுரவாயல் சட்ட மன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி  தலைமையில், திமுக கட்சியினை சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் அணிவகுத்து மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட வானகரம் மேட்டுக்குப்பம், ராமாபுரம் 154 வார்டு. வளசரவாக்கம் 152 வார்டு, சின்ன போரூரில் 151 வார்டு ஆகிய பகுதிகளில் உள்ள புரட்சியாளர் அண்ணல் B.R. அம்பேத்கர் அவர்களின் அண்ணலின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்..

மேலும், இந்நிகழ்வில் வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன்.MC, அ.ம.துரைவீரமணி. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமாபுரம் வ. செல்வகுமார்.MC, மாவட்ட அமைப்பாளர் V.ராஜேஷ், பகுதி துணை செயலாளர் வே.மதியழகன்.வட்ட செயலாளர்கள் S.அப்பன்(எ) சத்தியமூர்த்தி, அ.மோசஸ்,ராதா செல்வம் மாமன்ற உறுப்பினர்கள் S.பாரதி.MC,K.ராஜி.MC, செல்வி ரமேஷ்.MC,S.சங்கர் கணேஷ்.MC, மற்றும்  மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட , பகுதி, ஒன்றிய அணிகளின்  அமைப்பாளர்கள் , துணை அமைப்பாளர்கள் உடன் வட்டக் கழக நிர்வாகிகள், கிளை கழகம் நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் கலந்து கொண்டு இந்நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here