செங்கல்பட்டு, ஏப். 08 –
செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாகவும் மேலும் மருத்துவக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்து உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் வசதி வாய்ப்புகள் இல்லாத ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயளிகள் மருத்துவச் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.
மேலும் இம்மருத்துவமனைக்கு உள்ளூர் நோயாளிகள் மட்டுமல்லாது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மேலும் அந்நகர சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி நடைப்பெறும் சாலைவிபத்துகளில் விபத்துக்குள்ளாகும் அவசர சிகிச்சை நோயாளிகளும் இம்மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
இந்நிலையில் இம்மருத்துவமனையில் அடிப்படை தேவையும் மற்றும் தற்போது கோடைக்காலமாக இருப்பதாலும் இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் அட்டண்டர்களுக்கும் குடிநீர் தேவை என்பது மிக முக்கியமானதும் அதிகப்படியான தேவைகளும் உள்ள நிலையில் இம்மருத்துவமனையில் அறவே குடிநீர் இல்லாது இருப்பது அங்கு வரும் நோயாளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் உள்ள குடிநீர் தொட்டி முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குழாய்களில் தண்ணீரும் வருவதில்லை இதனால் மருத்துவமனை எதிரே உள்ள கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் அவல நிலை உள்ளது.
மேலும் அப்பகுதி வாழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் நோயாளிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தெரிவிக்கும் போது மாவட்டம் பிரிப்பு என்பது அப்பகுதி மக்களின் அடிப்படை மற்றும் இதர தேவைகளை உடனுக்குடனும் மேலும் அதிகப்படியான காத்திருப்புகள் இல்லாமல் கிடைத்திடும் நல்நோக்கத்துடனே அரசு இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் அதற்கான மாறான நிலையை தற்போது வரை மாறாமல் இருந்து வருகின்றதென அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பிரச்சினைக்குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தமிழக அரசு என அனைவரும் முக்கிய கவனம் செலுத்தி இப்பிரச்சினை உடனடியாக தீர்த்து வைத்து நோயாளிகளுக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.