பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா கொடியேற்று விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

பாபநாசம், ஏப். 4 –

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா வருகிற திங்கள் 10ஆம் தேதி செவ்வாய் 11ஆம் தேதி புதன் 12ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு இன்று காலை குருத்தோலை பவனி , கொடியேற்று விழா நடைபெற்றது.

முன்னதாக பாபநாசம் கீழவீதி தளபதி மக்கள் மன்றத்திலிருந்து பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் குருத்தோலை பவனி ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தனர்.

பின்னர் அது சமயம் சென்னை தியான ஆசிரமம் பொருளாளர் டோமினிக் ஜெயக்குமார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருவிழா கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தின் இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர்,  பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here