செங்கல்பட்டு, ஏப். 03 –
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானமும் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பகல் 12 மணிக்கு தான் அரசு மதுபான கடையை திறக்க வேண்டும் என்றிருக்கும் நிலையில், இந்நகரில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மதுபானம் கிடைப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் தெரியபடுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என அந்நகர பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுப்போன்ற சட்ட விரோதமாக இயங்கும் பார்கள் மீது நடவடிக்கை எடுத்திடவும் அதனால் ஏற்படும் குற்றச்செயல்களை தடுத்திடவும் அந்நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















