செங்கல்பட்டு, ஏப். 03 –

தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைப்பெற்றது.

செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு பகுதியில் துவகிய இப்பேரணி அரசு கலை கல்லூரி, அரசு மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்தது. மேலும் இப்பேரணியில் பங்கேற்ற 300- க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

இதில் குறிப்பாக உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விற்பனையாளர்கள் பிரிதிநிதிகளிடம் கருத்து கோரப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பும் உகந்த சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் கேரள மாநிலத்தில் வழங்கப்படுவது போல் ஓய்வூதியம் வழங்க ஏதுவாக கூட்டுறவுத்துறை உயர் அலுவலகள் கேரள மாநிலம் சென்று அங்குள்ள நடைமுறையை கண்டறிய வேண்டும், கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர்கடன், நகைகடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் அனைத்திற்க்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கை வலியுறுத்திய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here