கும்பகோணம், மார்ச். 27 –

கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கும்பகோணம் கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இறைவன் கோடீஸ்வரர். இறைவி பந்தாடுநாயகி தாயார் ஆவர்கள்.

மேலும் இத்திருதலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தனது திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்பு மூர்த்தியாகவும், மேலும் தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது இத்திருத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.

மேலும், பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) என அவர் பெயர் பெற்றார் என இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது.

மேலும், இங்கு இறைவன் பரமசிவனின் திருபெயா் கோடிஸ்வரா் என்பதை போல மற்ற பாிவார தெய்வங்களுக்கும் இத்திருக்கோயிலில் கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இத்தகு சிறப்பு மிக்க இத்தலத்தின் பங்குனி உத்திர பெருவிழா ஆண்டு தோறும் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதுப் போன்று இவ்வாண்டுக்கான விழா, இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கொடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது

அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான 31ம் தேதி ரிஷப வாகன ஓலைச்சப்பரமும், 7ஆம் திருநாளாக 2ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், ஒன்பதாம் நாள் விழாவாக 4ம் தேதி திருத்தேரோட்டம் பத்தாம் நாள் விழாவாக 5ம் தேதி பஞ்சமூர்த்திகளும் கொட்டையூர் காவிரி ஆற்றில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here