திருவாரூர், மார்ச். 20 –
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் மேலும் இவர் தினக்கூலித் தொழிலாளி ஆவார். இந்நிலையில் இவர் கடந்த 25.4.2022- ஆம் தேதியன்று, திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு மொபைல் போன் விற்பனை நிறுவனத்தில், ரூ.15,604-க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி்யுள்ளார்.
மேலும் அந்த ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கடந்த 6.5.2022- ஆம் தேதியல் பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தில் அத்தொழிலாளி தெரிவித்துள்ளார். அப்போது அந்நிறுவனம் மூலம் அப்போனை சரிசெய்ய அவரிடமிருந்து ரூ.1018-க்கு பெற்றுள்ளனர்.
இருப்பினும், அப்போனில் உள்ள பழுது சரி செய்யப்படாமல் திருப்பி அவரிடம் கொடுத்துள்ளனர். மேலும் அதுக்குறித்து அக்கூலி தொழிலாளியான வாடிக்கையாளர் அந்நிறுவனத்திடம் கேட்க, அதற்கு முறையான பதிலும் மேலும் பொருப்போடு நடந்துக் கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது,
மேலும் இதனால் மன உளைச்சலுக்கு உட்பட்ட கூலித்தொழிலாளியான செல்வகுமார் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று முன்தினம் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பில் மொபைல் போனுக்கான பொருள் உத்திரவாதம் அந்நிறுவனம் வழங்கிவுள்ள காலக்கெடுமுடிவதற்கு முன்பாக பழுதை நீக்குவதற்கு பணம் பெற்றது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனவும், மற்றும் சேவை குறைபாடு உள்ளதெனவும் இந்த ஆணையம் கருதுகிறது. . எனவே அந்த பழைய போனை எடுத்துக்கொண்டு போனுக்கான ரூ.15 ஆயிரத்து 604 வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.30,604-ஐ அந்த மொபைல் நிறுவனம் வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.