சோழவரம், மார்ச். 18 –
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நான்கு ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ளும் புதிய டிராக்டர் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிதியின் கீழ் வழங்கப்பட்ட இவ்வாகனங்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நான்கு ஊராட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதன்படி சோழவரம் மற்றும் அலமாதி ஊராட்சிகளுக்கு தலா ஒரு டிராக்டரும், பாடிய நல்லூர் ஊராட்சிக்கு இரண்டு டிராக்டர்களையும் அந்தந்த .ஊராட்சி மன்ற நிர்வாகிகளிடம் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சி, சோழவரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன். ஒன்றிய துணை பெருந்தலைவர் கருணாகரன். ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் செய்திருந்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் லோகதாஸ், அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பு ஜெயலட்சுமி முனுசாமி,சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன்,பாடியநல்லூர் ஊராட்சி மன்ற செயலர் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.























