மீஞ்சூர், மார்ச். 15 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீகொங்கிஅம்மனை வர்ணித்து அவ்வூரைச் சேர்ந்த கவிஞர் கலையரசன் என்பவர் தொகுத்தெழுதி இசையமைத்துள்ள பக்தி பாடலின் ஒலி நாடா வெளியீட்டு விழா அத்திருக்கோயிலில் இன்று நடைப்பெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும், வல்லூர் பா.து. தமிழரசன். பாலு. விஸ்வநாதன். கலைமணி. ராஜா. கார்த்திக். கலாநிதி. பார்த்திபன். கலாவதி மனோகரன். உள்ளிட்டவர்கள் இவ்விழாவினை முன்னின்று வழி நடத்தினார்கள்.
தொடர்ந்து இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் வருகைத் தந்து, கவிஞர் கலையரசன் கொங்கியம்மனை பற்றி பாடல் எழுதியும் இசையமைத்தும் தொகுத்து வழங்கிய ஒலி நாடாவை வெளியிட்டும் அதற்கான காணொளியை கிராம மக்களின் மத்தியில் திரையிட்டு காண்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இவ்விழாவில் பங்கேற்று விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் விழா கமிட்டி சார்பில் அருசுவை நிறைந்த மதிய உணவு பரிமாறப்பட்டது.