கும்பகோணம், மார்ச். 13 –

கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கல்லூரி ரவுண்டானா அருகே ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியும், மேலும் அவ்வழக்கினை திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் அக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், இவ் ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் ராம ராமநாதன் அவைத்தலைவர் ராம்குமார் முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு.த. சின்னையன் முன்னாள் மாவட்ட ஊராட்சிகள் உறுப்பினர் குழந்தைவேல் மகளிர் அணி பொறுப்பாளர் கவிதா ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குப் பெற்றவர்கள் கண்டன உரை நிகழ்த்தும் போது  எடப்பாடி பழனிசாமி என்பவர் தனி மனிதன் இல்லையென்றும், அவர், 1.5 கோடி அதிமுக கட்சி தொண்டர்களின் தலைவர் எனவும் அப்போது தெரிவித்தனர்.

அவர் இன்றைய எதிர்க்கட்சித் தலைவரெனவும், மேலும் முன்னாள் முதலமைச்சரெனவும், மேலும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தமிழக அரசே அவர் மீது திட்டமிட்டு பொய் வழக்கை போட்டுள்ளதாக குற்றசாட்டு எழுப்பியும், மேலும், எடப்பாடியார் அதிமுகவையும் அக் கட்சியின் சின்னத்தையும் மீட்டெடுத்தவர் எனவும் அதனால் திமுக தலைமையிலான தமிழக அரசு எடப்பாடி பழனிச்சாமியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக மேலும் குற்றச்சாட்டுகளை அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்களின் கண்டன உரை நிகழ்வின் போது, எடப்பாடியார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக தமிழ்நாடு காவல்துறையினர் வாபஸ் பெற வேண்டும் எனவும், இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் அதிமுக சார்பில் போராட்டத்தை கையிலெடுக்கும் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here