உத்திரமேரூர், மார்ச். 09 –
உத்திரமேரூர் அடுத்துள் கட்டியாம்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைத்திய கல்யாண சுந்தரர் சுவாமி மற்றும் கிராம தேவதை மாரியம்மன் திருக்கோவிலுக்கு நாளை மகா கும்பாபிஷேகம் நடைப்பெறவுள்ளது.
மேலும் இப்பழமையான இத்திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த அவ்வூர் பொதுமக்கள் முடிவு செய்து, அத்திருக்கோயிலின் பல்வேறு திருப்பணிகள் செய்து அக்கோயில் புதுப்பிக்கப்பட்டது.
மேலும் நாளை நடைப்பெறும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அக்கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம், விநாயகர் பூஜை, தனபூஜையும் நேற்று மாலை 5 மணிக்கு முதல்கால யாக பூஜை துவங்குகியது. மார்ச் 9 ஆம் தேதியான இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடைப்பெறுகிறது.
அதனைத்தொடர்ந்து நாளை மார்ச் 10 ஆம் தேதி காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை 8:15 மணிக்கு கோவில் விமான கோபுர கலசங்களுக்கும், மூலஸ்தான மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைப்பெறுகிறது.
அதனைத்தொடர்ந்து சுவாமிகளின் அலங்கார திருக்காட்சியும், மஹா தீப ஆராதனையும் நடப்பெறுகிறது. மேலும் இந்நிகழ்வினை காண வரும் பக்த கோடிகளுக்கு திருக்கோயில் பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகச்சிறப்பாக விழா குழுவினர் மற்றும் கட்டியாம்பந்தால் கிராம மக்கள் செய்து வருகின்றனர். மேலும், இதனையே அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு அனைவரும் இவ்விழாவிற்கு வருகைத் தந்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழவும், மேலும் இவ்விழாவினை சிறப்பிக்கும் படியும் விழா கமிட்டி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





















