கும்மிமிடிப்பூண்டி, மார்ச். 08 –
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட காரணி கிராமத்தில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கான திட்டம் திமழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்திட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள சுமார் 300, ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இத்திட்டப்பணிக்காக திடீரென வருவாய் துறையினர் அப்பகுதியில் உள்ள நிலங்களை முன்னறிவிப்பின்றி அளவீடு செய்ய வந்துள்ளனர், இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நில அளவீடு செய்ய முடியாமல் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்,
மேலும் அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுக்குறித்து அப்பகுதிகள் விவசாயிகள் தெரிவிக்கும் போது, இவ்விவசாய நிலங்கள், மூன்று போகம் நெற்பயிர்கள் விளையும் நிலங்கள், எனவும், மேலும், கத்திரி, வெண்டைக்காய், முள்ளங்கி, பூ வகைகள் ஆகியவைகளையும் இப்பகுதி வாழும் சிறு குறு விவசாயிகள் பயிரிட்டு தங்கள் வாழ்வாதாரத்தைப் பேணி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அரசு இந்நிலத்தைக் கையகப்படுத்தி அதில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருவது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் வாழ்க்கையில் வாழ்வதற்கானப் பயத்தையும் ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இத்திட்டத்தினை நிறைவேற்றுவதுக் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், மேலும் விவசாயிகளை பாதிக்கும்இத்திட்டத்தினை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், மேலும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான அனைத்து விதமான சலுகைகளை மட்டுமே அரசுகள் நிறைவேற்றி வருவதாக அப்போது அவர்கள் குற்றச்சாட்டினார்கள்.
“ஏலும் அரசு முன்னெடுத்து வரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களுக்கும் தாங்கள் எப்போதும் ஆதரவளிப்போம் எனவும் அதே நேரத்தில் அத்திடங்கள் பொதுமக்களையும் விவசாயிகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் போது அத்திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டுவோம் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தி டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியா அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பொன்னேரி கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ராமனாதனிடம் அளித்தனர்.