பாபநாசம், பிப். 22 –

கும்பகோணம் அடுத்த பாபநாசம் அருகேவுள்ள பண்டாரவடையில்  ஹலீமா பீவி என்பவருக்கு சொந்தமாக சர்வே எண் 187/11 – ல் நஞ்சை நிலம் உள்ளது அந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் சார் பதிவாளர் துணைக் கொண்டு வேறொரு நபருக்கு விற்பனை செய்து பத்திர பதிவு செய்து உள்ளார்.

இந்நிலையில் இத்தகவலயறிந்து ஹலீமா பீவி,  யூசுப் அலியிடம் போய் என்னுடைய நிலத்தை எப்படி எனக்கு தெரியாமல் அனுமதியின்றி விற்கலாம் என்று கேட்டதற்கு அவர் அடியாட்களை கொண்டு தாக்க வந்ததாக கூறப்படுகிறது.

படத்தில் காண்பது, பண்டாரவடை ஹலீமா பீவியும் அவருக்கு பாத்தியப்பட்ட சர்வே எண் 187/11 – ல் நஞ்சை நிலமும் …

இந்நிலையில் ஹலீமா பீவி பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் அக்காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி விசாரணை மேற்கொண்டு அரசு அதிகாரிகள் உட்பட 7 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here