கும்பகோணம், பிப். 02 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் எஸ் கே எஸ் டி எஸ் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பிற்குரிய மேற்படிப்புக்கான பாடப்பிரிவுகளில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்த கல்லூரியில் படிக்கலாம்? என்கிற ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கிடும் கல்வி முகாம் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தலைமையில் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.

இம் முகாமில் கல்வியாளர் தேசிய விருத்தாளர் முருகையன் பக்கிரிசாமி சர்வதேச மழலையர் கல்வி ஆராய்ச்சியாளர் கல்வியாளர் மற்றும் சமூக அலுவலர் ஷோபா மணிகண்டன் திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் கோ.க அண்ணாதுரை ஒன்றிய செயலாளர் மிசா மனோகரன் தலைமை ஆசிரியர்கள் புகழேந்தி திலகம் அணைக்கரை இளஞ்செழியன் சிற்றாடையநல்லூர் உஷாராணி துகிலி கமலா மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முகாமினை துவக்கி வைத்து, அரசு கொறடா கோவி செழியன் மாணாக்கர்களிடம் நீண்ட உரை நிகழ்த்தினார். மேலும் அப்போது அவர் ஐ.ஏ.எஸ் படிக்கும் மாணவிக்கு அக் கல்விக்காகும் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக அப்போது தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here