கும்பகோணம், பிப். 01 –

கும்பகோணம் மகாமக குளம் அருகில் உள்ள Dr. M.V தியாகராஜன் பூங்காவை சக்தி ரோட்டரி சங்கம் தத்து எடுத்து அதனைப் புதுப்பிக்கபட்டு மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிடும் திறப்பு விழா நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தத்தெடுத்து பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும், இதில் சக்தி ரோட்டரி சங்கத்தின் தலைவர் மைதிலி முத்துவேல் துணை மேயர் சு. ப. தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், மாநகராட்சி மண்டல தலைவர் நரசிம்மன், சுகாதாரத்துறை குழு தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி நல அலுவலர் பிரேமா, 41 வது மாமன்ற உறுப்பினர் கீதா பிரியா மற்றும் ரோட்டரி முன்னாள் ஆளுநர்  மணிமாறன், லியோன்  ராஜ்குமார்  மற்றும் சக்தி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

மேலும் இப்பூங்காவில் 130 மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மருத்துவ இசை நிகழ்வும் நடைபெற்றது. மேலும் இனி எதிர் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகள் தோறும் காலை நலம் இலவச யோகா  பயிற்சியும், சக்தி ரோட்டரி சங்கம் சார்பில் இப்பூங்காவில் நடைபெறும் என அச்சங்க நிர்வாகிகள் இவ்விழாவின் போது தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here