திருவள்ளூர், ஜன. 30 –

திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை எண்ணூர் உப்பங்கழி  கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடிகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கொசஸ்தலை ஆற்றினை ஒட்டிய வடசென்னை அனல்மின் நிலையம் தேசிய அனல்மின் நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும், கழிவுகள். சுடு தண்ணீர். போன்றவை  ஆற்றில் கலக்கப்படுவதால் ஆற்றின் வளம் பாதிக்கபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இவ்ஆற்றினை நம்பிதான் அதைச்சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும், மீனவர்கள் வாழ்ந்து வருவதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள எட்டுக் கிராம மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் என ஏராளமானவர்கள் தங்கள் கைகளிலும் படகுகளிலும் கருப்பு கொடிகள் ஏந்தி மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முழக்கங்களை எழுப்பியும் போராடி வருகின்றனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது, 1990 காலக்கட்டங்களில் இருந்த ஆற்றின் தன்மையானது ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்கோபுரத்தால் மாறியிருந்த நிலையில், மேற்கொண்டு அமைக்கவிருக்கும் மின் கோபுரத்தால் ஆற்றின் தன்மை மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிவாசிகளின் உடல் நிலையும் பாதிப்படைய கூடும் என்பதை கருத்தில் கொண்டு தாங்கள் மின் கோபுரத்திற்கு எதிராக போராடி வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்தனை தொழிற்சாலைகள் இங்கு அமைந்தும் கூட உள்ளுர் பகுதிவாசிகளுக்கான தங்களுக்கு எவ்வித வேலைவாய்ப்படாமலும், இருக்கும் வேலைவாய்ப்பும் குறைந்துக் கொண்டே வருவதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பிரச்சினைத் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இப்பகுதி மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும்,  இப்போராட்டத்தின் போது எவ்வித அசம்பாவிதங்கள் நிகழாதப்படி இருக்க அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here