மதுக்கூர், ஜன. 23 –

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டம் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்களும், மற்றும் அட்மா திட்ட தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி இக்கூட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான செயல்திட்ட அறிக்கையினை வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அவர்களின் ஒருமனதான ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அட்மா திட்ட தலைவர் இளங்கோவன் இத்திட்டத்தில் வழங்கப்படும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி பயனடையமாறு இக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினருகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இத்திட்ட அறிக்கையில்  இயற்கை விவசாயம், பாரம்பரிய ரகங்களை மேம்படுத்துதல், சிறிய வகையிலான வேளாண் கருவிகளை ஊக்குவித்தல் மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்தும் மற்றும் தொழில் நுட்ப்பத்தினை தெரிவிப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுயிருந்தது.

நிறைவாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சி .சுகிதா இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார். மேலும்,  இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ராஜு, அய்யாமணி ஆகியோர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here