தஞ்சாவூர், ஜன. 09 –
தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள உளுந்து விதைகளை மட்டுமே நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் ந.விநாயகமூர்த்தி .தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தற்போது உளுந்து சாகுபடி தனிப்பயிராகவும், நெல் வயல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்யும் பணிகளில் தற்போது விவசாயிகள் ஆர்வமுடம் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், உளுந்து விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சான்று பெற்ற சான்று அட்டை பொருத்தப்பட்ட தரமான உளுந்து விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு தரமான உளுந்து விதைகள் விற்பனையின் போது, விதைச்சட்ட விதிகள்படி, கொள்முதல் பட்டியலில் விதை விற்பனை உரிமம் எண், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், உற்பத்தியாளர் விவரம் உட்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.எனவும்,
மேலும் சான்று அட்டை குறிப்பாக ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகளையே விற்பனை செய்யவேண்டும். எனவும், மேலும் அப்போது விதை விற்பனையாளர்கள் தரமான உளுந்து விதைகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், குவியல் வாரியாக விதை மாதிரி பரிசோதனை செய்த முளைப்பு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் ஆகியவற்றை, கண்டிப்பாக தங்களது விற்பனை நிலையங்களில் வைத்திருக்கவேண்டும். எனவும்,
மேலும், தர பரிசோதனை அறிக்கை, பதிவுச்சான்றிதழ் இல்லாத உளுந்து விதைகளை விற்பனை செய்யும் விதை விற்பனையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எடவும்,
மேலும், விதை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்த உளுந்து விதைகளை பாதுகாப்பாகவும், விதை விற்பனை உரிமம் பெற்ற இடத்தில் வைத்திருக்க வேண்டும். என்றவாறும்
மேலும், விவசாயிகளுக்கு, சான்று பெற்ற உளுந்து விதைகளான வம்பன் 6, வம்பன் 8, வம்பன் 10, வம்பன் 11, ஏடிடீ 5, டீ 9 போன்ற விற்பனை செய்யும் போது, விற்பனை ரசீது கண்டிப்பாக கொடுக்க வேண்டும். எனவும் மேலும் அதில், விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன், விவசாயி பெயர், முகவரி மற்றும் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். என்பது உள்ளிட்ட விதைச்சட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டி தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் ந.விநாயகமூர்த்தி தனது செய்திக்குறிப்பில் தனியார் விதை விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.






















