பாபநாசம், ஜன. 02 –

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா இராஜகிரியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் இருதய நோய், மனநல மருத்துவம், முதியோர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவம் உட்பட பல்வேறு சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

மேலும், ரத்த அழுத்தம், மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதலும், தேவைப்படுபவர்களுக்கு இசிசி, எக்ஸ்ரே போன்றவையும் எடுக்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது உடலை பரிசோதனை செய்து பயனடைந்தனர். இதில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ் கே முத்துச்செல்வன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, ஒன்றிய செயலாளர்கள் , தாமரைச்செல்வன், நாசர் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார் ஆனந்தராஜ், ஊராட்சி உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சமீமா பர்வீன் முபாரக் உசேன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், காஷ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க தன்னார்வலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here