தஞ்சாவூர், ஜூன். 21 –
தஞ்சாவூர் மாவட்ட அளவில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. இதில் பங்கேற்க எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இத் திறன் போட்டி 2023 – ல் பல்கலைக்கழகம், மருத்துவம், மற்றும் மருத்துவம் சார்ந்த, பொறியியல், கலை மற்றும் அறிவியல், பால்டெக்னிக், பள்ளி, ஐ.டி.ஐ படித்த மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம் என மேலும் தெரிவித்துள்ளது.
எதிர் வரும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைப்பெறவுள்ள சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாகவும் அதற்கான தொடக்கமாகவும் மேலும் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் இம்மாவட்ட அளவிலான இத்திறன் போட்டி பயன் உள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தில் இப்போட்டி தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறதென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் naanmudhalvan.tn.in/tnskills என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் விவரங்களுக்கு tnkills@naanmudhalvan.in வலை தளத்தினை பார்வையிடலாம்.
தொடர்ந்து 10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைப்பெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் எதிர் வரும் ஜூன் 30.06.2023 ஆகும். மேலும் இதற்கான வயது வரம்பு 01.01.1999 அன்றும் ஒரு சில திறன் போட்டிகளுக்கு 01.01.2002 அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.






















