கொளத்தூர், டிச. 02 –

சவீதா சட்டப்பள்ளி மற்றும் கொளத்தூர் இன்ஃபண்ட் ஜீசஸ் பள்ளி மாணவர்கள் இணைந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை பேராசிரியை Dr.ஆஷா சுந்தரம் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை பிரியதர்ஷினி செய்திருந்தார். மேலும் இந்நிகழ்வில் மாணவர்களிடையே பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை என்றால் என்ன, அதை எப்படி தடுப்பது என்பது குறித்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், ஆன்லைன் வாயிலாக குழந்தைகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் தவறானமுறையில் மன அழுத்தங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய ஆழமான கலந்துரையடல் அமர்வும் நடத்தப்பட்டது,

மேலும், சவீதா சட்டப்பள்ளி மாணவர்களின் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டதையும், இந்நிகழ்வின் மூலம் மாணவர்களிடையே அணுகி அவர்களுக்கு சட்ட விழிப்புணவு வழங்கியது குறித்தும் பேராசிரியர் ஜெமிமா கிரேஸ் மற்றும் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் ஜி.எஸ்.பிரபாகரன், இல்டன் ஆல்பர்ட், மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெரோல்ட் மேத்யூ, நிரஞ்ச லட்சுமி ,மாதவ ஈஸ்வர் மற்றும் நிதிஷ் உடுபா ஆகியோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here