கும்பகோணம், நவ. 27 –

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை வர்ண தைக்கால் தெருவில் வசித்து வருபவர் ஹாஜாநஜிபுதின் மகன் நூருல்அமீன்.

இவர் இராஜகிரியில் உள்ள காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளி மாணவன் நீரின் சுழலில் சிக்கிக்கொண்டார். உடனே பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலயறிந்து அச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் குடமுருட்டி ஆற்றில் இறங்கி மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு நூருல்அமீன் உடலை மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து பாபநாசம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here