கும்பகோணம், செப். 08 –
கும்பகோணத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற 11 ஆம் தேதி நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற உள்ள நிலையில் அதுக்குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் உறவுழகன், மாமன்ற உறுப்பினர் ரூபினிஷா அலெக்ஸ், நகர செயலாளர் கலையரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, ஒன்றிய செயலாளர் பாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மனோகரன், நகர செயலாளர் செந்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், நகர செயலாளர் செந்தில், எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், இந்திய தேசிய காங்கிரஸ் நகர தலைவர் மீசாவுதீன், திராவிட கழக மாவட்ட செயலாளர் நிம்மதி, நீல புலிகள் கட்சி தலைவர் இளங்கோவன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சனாதன சக்திகளுக்கு இங்கு இடமில்லை. சங்பரிவார்களின் வன்முறைகளுக்கு இங்கே இடம் தரமாட்டோம், அவர்களின் சதிகளை, சதி திட்டங்களை முறியடிப்போம் என்ற நோக்குடன் செயல்படுகின்ற அனைவரும் பங்கேற்கக்கூடிய ஒரு அறப்போர்தான் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் ஆகும்.
எதிர்வரும் அக்டோபர் 11-ம் தேதி மாலை 4 மணியளவில் பழைய மீன் மார்க்கெட்டில் இருந்து தாராசுரம் வரை சுமார் 10,000 பேர் கலந்து கொள்ளும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.