செங்கல்பட்டு, அக். 01 –
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே புத்திரன்கோட்டை என்ற பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார்க்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அப்போது அவ்வழியே வந்த டொயோட்டோ இட்டியாஸ் காரை மடிக்கி சோதனை செய்ததில் 36 பாக்சில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காரையும், மற்றும் 36 பெட்டிகளில் இருந்த 1776 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் நாகராஜ் என்பதும் அவர் புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், நாளை காந்தி ஜெயந்தி என்பதால் தமிழகத்தில் (டாஸ்மாக்) மது கடைகளுக்கு முழு விடுமுறை என்பதால் குறைந்த விலை மதுபாட்டில்களை புதுச்சேரியிலிருந்து தமிழக எல்லைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டம் தீட்டி மதுப்பானங்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் மது பாட்டில்களை கடத்தி வந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த கார் ஓட்டுநர் நாகராஜிடம் மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















