காஞ்சிபுரம், செப். 29 –
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குடபட்ட மேனலூர் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நெல்கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக கடந்த 15. 09 .2022 முதல் திறக்கபட்டுள்ளது என்ற அறிவிப்பினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் அறிவித்தும், ஆனால் இதுநாள் வரை அந்நிலையம் திறக்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் அதனை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட உட்பட்ட பகுதிகளில் 23 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். என்றும் அரசு அறிவித்த நிலையில், மேனலூர் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நெல்கொள்முதல் நிலையம் மட்டும் அறிவிக்கப்பட்டும், செயல்படுததால், அரசு உயர்மட்ட அலுவலர்களின் அலட்சிய போக்கினால் மூன்று மாதங்களாக அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்ய முடியாத நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மேலும், மேனலூர் கிராமத்தை சுற்றி ஏழு கிராமங்கள் உள்ளதாகவும் தற்பொழுது நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காததால் சுமார் 25 ஆயிரம் மூட்டை வரையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்திலும் வீடுகளிலும் தார் பாய்ள் கொண்டு போர்த்தி பாதுகாத்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து அதிகாரியிடம் கேட்ட பொழுது உங்கள் பகுதியில் நெல் மணிகள் இல்லை என்று தெரிவிக்கின்றனர். மேலும் உங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பலமுறை மனு அளித்துள்ளதாகவும், அதற்கு முறையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் அருகே பல விவசாயிகள் நெல்மணிகளை குவியலிட்டு தார்பாய்கள் மூலம் பாதுகாத்து வருகின்றனர். நெல்மணிகளை மழை காலத்திலும் வெயில் காலத்திலும் பல்வேறு பகுதிகளுக்கு மாற்றி அமைப்பதற்கு போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளதாகவும் ஆகையால் விரைவாக நெல் கொள்முதல் நிலையத்தை திறந்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு விவசாயிகள் நெல்மணியுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் இதனால் அவசர தேவைக்கருதி விவசாயிகள் தங்கள் நெற்களை தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தனியார்களுக்கு இலாபம் ஈட்டவே அரசு அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கிறதோ என்ற சந்தேகத்தையும் விவசாயிகள் எழுப்புகின்றனர்.





















