மீஞ்சூர், செப். 30 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள நாலூர் கேசவபுரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சக்தி வராஹி அம்மன் ஆலயம். இக்கோயிலின்  திருப்பணிகள் புனரமைக்கப்பட்டு வராஹி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை .இரண்டாம் கால யாக பூஜை .கோ பூஜை. உள்ளிட்டவை நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மன் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

தொடர்ந்து இந்நிகழ்வைக் காண வந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பி.வி.சங்கர்ராஜா, மீஞ்சூர் நகர செயலாளர் சதீஷ், மாற்று திறனாளிகள் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிக்குமார், ஐஎன்டியுசி மாநிலத் துணை பொதுச் செயலாளர் எம் பி தாமோதரன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும், மற்றும் மீஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் இவ்விழாவல் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் அபிஷேக பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாட்டினை இத்திருக்கோயில் திருப்பணி விழாக் கமிட்டி உறுப்பினர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here