கும்கோணம், செப். 26 –

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் முன்னாள் கபடி வீரர்  இளங்கோவன் என்பவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாச்சியார்கோவில் பாரதிநகரில் ஆடவர் கபடி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் பல மாவட்டங்களிலிருந்தும் கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதில் நன்னிலத்தைச் சேர்ந்த கபடி வீரர் செந்தில் என்பவரும் அப்போட்டியில் பங்கேற்று விளையாடினார். இந்நிலையில்  அவர் விளையாடிவிட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்கள் நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனைக்கு நன்னிலத்தைச் சேர்ந்த கபடி வீரர் செந்திலை அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர்.

அவருக்கு அம்மருத்துவமனையில் மருத்துவர்கள் முதற்கட்ட சிகிச்சை வழங்கி அவரை மேல் சிகிச்சைக்காக  கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செந்திலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here