கும்பகோணம், செப். 24 –
கும்பகோணம் அருகே உள்ள தமிழக திருப்பதி என போற்றப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக திருப்பதி என போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான ஒப்பிலியப்பன் கோவில் என அழைக்கப்படும் வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூலவர் வெங்கடாஜலபதி சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்திலும், உற்சவர் எண்ணப்பர், ஸ்ரீதேவி, பூமாதேவி அம்மையார்களுடன் உடன் பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். இக்காட்சியைக் கண்குளிர காண வருகை தந்த ஏராளமான பக்தர்கள் சுமார் 2 மணி நேரமாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.




















