திருவள்ளூர், செப். 21 –
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகம் இன்று நடைபெற்றது. இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன், ஆகியோர் கலந்து கொண்டு 494 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வீட்டுமனை பட்டா குடும்ப அட்டை காப்பீடு அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி. வட்டாட்சியர் செல்வகுமார், தனி வட்டாட்சியர் செந்தில்குமார், சோழவரம் திமுக ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஆர்த்தி ஹரிபாபு, மாதவரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் கணிமொழி சுந்தரமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு அங்கு பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.
இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.






















