பொன்னேரி, செப். 20 –

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் புனித சூசையப்பர் பதின் பள்ளி எனப்படும் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி அமைத்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 27-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இங்கு பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளி நிர்வாகம், 12 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை எந்தவித முன் அறிவிப்பு மற்றும் காரணங்களை அவர்களுக்கு தெரிவிக்காமல் திடீரென பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பள்ளியின் கல்வி ஆண்டு துவங்கி 5 மாதமே ஆன நிலையில் தங்களை திடீரென பணி நீக்கம் செய்வதால் தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் எனவும், மேலும் வேறொரு பள்ளியில் பணிக்கு சேர முடியாத நிலையும் உள்ளது எனவும், இந்த வருமானத்தை நம்பியே தங்கள் குடும்பங்கள் இயங்கி வருவதாகவும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பள்ளியின் வாயல் முன்பு அமர்ந்து நீதிக்கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், இந்த கல்வி ஆண்டு முடியும் வரை பள்ளியில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் தாங்கள் பணிபுரிந்த காலக்கட்டத்தில் தங்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட பிடித்தம் மற்றும் திடீர் பணி நீக்கம் செய்யப் படுவதால் ஏற்படும் இழப்பீடு போன்ற அனைத்து விதமான தொகைகளையும் தங்களுக்கு வழங்கிட வலியுறுத்தியும் அவர்கள் பள்ளி நிர்வாகம், மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரியபாளையம் காவல்நிலைய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி  ஆசிரியர்களை பள்ளி வகுப்பறைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here